எரிபொருள், உரம் பெற ரஷ்யாவின் உதவியை நாடத் தயார்

Date:

நாடு எதிர்நோக்கும் நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ரஷ்யாவின் உதவியை நாடுவதற்கு 10 கட்சிகள் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாட தமது குழுவினர் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் உர நெருக்கடியை தீர்ப்பதற்கு ரஷ்யாவின் ஆதரவை தொடர்ந்தும் கோரிக்கை விடுத்த குழு, அரசாங்கம் வேண்டுமென்றே தவிர்ப்பதாக குற்றம் சாட்டியது.

ரஸ்ய தூதுவரை சந்தித்து எரிபொருள் மற்றும் உரம் இறக்குமதிக்கு தற்போதுள்ள தடைகள் குறித்து கேட்டறிந்து

,இலங்கை தரப்பில் அவ்வாறு தடைகள் இருப்பின் அவற்றை உடனடியாக தீர்க்க தலையிட தயாராக இருப்பதாகவும் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...