அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடமே நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதை ஒருபோதும் தள்ளிப் போட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் சாசனம் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிதியை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, அடுத்த வருடம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஆகியன 2025ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் நடத்தப்பட வேண்டுமென மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.