விஜயதாசவிற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

Date:

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் லசந்த அழகியவண்ணவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​எதிர்மனுதாரர்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தது.

ஜூலை 9 ஆம் திகதி முறைப்பாட்டை மீண்டும் அழைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...