அஸ்வெஸ்ம சிறந்த திட்டம் ஆனால் முறையாக செயற்படுத்த வேண்டும் – சஜித்

0
224

அஸ்வெஸ்ம நிவாரணத் திட்டத்துக்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதிலும் சலுகைகளை வழங்குவதிலும் பெரும் சிக்கல் உள்ளது. எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி முறையான கணக்கெடுப்பு மூலம் பணிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது. மின்சார நுகர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டால் அது விஞ்ஞான ரீதியாக சரியான தெரிவாகும் என எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

லேர்ன் ஏசியா நிறுவனம் 13 மாவட்டங்களில் 10,000 குடும்பங்களை மையமாக வைத்து நடத்திய ஆய்வின்படி, நாட்டின் ஏழை மக்கள் தொகை 14 சதவீதத்தில் இருந்து 17 சதவீதம் அதிகரித்து 31 சதவீதமாகவும், ஏழைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தில் இருந்து 70 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. ஒரு பிரிவினருக்கு இந்த சலுகைகள் கிடைக்காத நிலை ஏற்படும் எனவும் அஸ்வஸ்ம வேலைத்திட்டம் கண்களை மூடி நன்மைகளை அகற்றும் வேலைத்திட்டமாகவே தோன்றுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் தொடக்கத்தில், எதிர்க்கட்சி பரிந்துரைத்தபடி, மின் நுகர்வு அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்தால், அது 80 சதவீதத்திற்கும் மேல் வெற்றி பெறும், தரவுகளின் அடிப்படையில் இது அறிவியல் பூர்வமான முடிவு என்றாலும், இந்த அரசு எந்தவொரு விஞ்ஞான அடிப்படையும் இன்றி தீர்மானத்தை அமுல்படுத்துகிறது. தகுதியுள்ளவர்களுக்கு நன்மைகளை வழங்காமல் நன்மைகள் பெறுவோருக்கு மீண்டும் நன்மைகளை வழங்குவதன் மூலம் பலருக்கு அநீதி ஏற்படுவதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வசஸ்ம நல்லதொரு வேலைத்திட்டம் என்றாலும் அதனை அமுல்படுத்தும் விதம் முற்றாக தோல்வியடைந்துள்ளதாகவும் இதனை சரிசெய்து அதற்கான அடிமட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here