EPF பயனாளிகளுக்கு 9% வட்டி வழங்க வருகிறது புதிய சட்டத் திருத்தம்

Date:

உள்ளூர் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களின் வருங்கால சேமலாப வைப்பு நிதிக்கு பாதிப்பு ஏற்படாதவாறும், ஊழியர்களின் சேமலாப வைப்பு நிதிக்கு குறைந்தபட்சம் 9% வட்டி விகிதத்தை வழங்குவதற்கும் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியத்திற்கு குறைந்தபட்ச வட்டி 9 வீதமாக வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இதனால், ஊழியர் சேமலாப நிதியத்திற்கான குறைந்தபட்ச வட்டி வீதமான 9 சதவீதத்தை உறுதிப்படுத்தும் சட்டங்களை கொண்டு வருமாறு ஜனாதிபதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, அடுத்த மூன்று வருடங்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு குறைந்தபட்ச வட்டி விகிதமாக 9 சதவீதத்தை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, ஊழியர் நலச் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் விரைவில் பெற்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...