கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
கஹவத்த, கொஸ்கெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று இரவு வந்த நான்கு நபர்கள், வீட்டிலிருந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட இரண்டு இளைஞர்களும் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுடப்பட்டனர். அதில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றைய இளைஞர் கஹவத்தை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் 22 வயதுடையவர் என்றும், காயமடைந்தவர் 27 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை யார் நடத்தினர், எதற்காக என்பது இன்னும் வெளியாகவில்லை, கஹவத்தை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.