நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

Date:

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன. 

குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தி அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் ஆட்சியமைக்கும் என்ற அடிப்படையில் இந்தப் புரிந்துணர்வு எட்டப்பட்டது. 

குறிப்பாக நுவரெலியா மாநகர சபை, வலப்பனை, அங்குராகெத்த, தலவாக்கலை,ஹட்டன் டிக்கோயா நகரசபை, கொத்மலை ஆகிய இடங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதாகவும், நுவரெலியா பிரதேச சபை,கொட்டகலை பிரதேச சபை, அக்கரப்பத்தன பிரதேச சபை, நோர்வுட் பிரதேச சபை ஆகிய இடங்களில் இ.தொ.கா ஆட்சி அமைப்பாகவும் புரிந்துணர்வு எட்டப்பட்டது. 

இந்த நிலையில், நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. அதிக ஆசனங்களை பெற்றிருந்தும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏனைய தரப்புடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. 

நோர்வூட் பிரதேச சபையில் போட்டியிட்ட ஏனைய கட்சிகளை விட அதிகமான வாக்குகளை பெற்று இ.தொ.கா முதலிடத்தை பெற்றதனால், மக்கள் ஆணையை தேசிய மக்கள் சக்தி மதிப்பதாகவும், மக்கள் ஆணையை நிலைநாட்டுவதற்கான தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் இக்கலந்துரையாடலின் போது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் தெரிவித்தனர்.

மேலும், விரைவில் நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. ஆட்சியமைக்கும்.‘‘ என்று இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பளை விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

கம்பளையில் தொழுவ விஹாரை ஒன்றின் முன் நடந்த வீதி விபத்தில் மூன்று...

நாட்டில் பிறப்பு வீதம் சடுதியாக குறைவு

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின்...

அரசாங்கத்துக்கு படுதோல்வி!

கண்டி மாவட்டத்தில் உள்ள உடுநுவர கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக குழுவை நியமிப்பதற்காக...

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5%ஆக அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக...