இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில் அறிவித்தார்.
ஸ்டார்லிங் இணைய சேவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது எக்ஸ் பக்கத்தில் இந்த இணைய சேவையின் உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது நமது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு வெற்றிப்படி என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கான முன்னேற்றங்கள் குறித்து ஆராய விரைவில் எலான் மஸ்கை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.