நீதிபதி வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு

0
154

ஊராபொல போபத்த பிரதேசத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் இருந்து ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்களும் ஆறு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தணகல்ல பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் திருட்டு நடந்தபோது நீதிபதி வீட்டில் இல்லை என்றும் வேலையாட்கள் மட்டுமே இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பொலிசார் நடத்திய விசாரணையில், வீட்டின் அலமாரியில் இருந்த சிறிய பெட்டகத்திலிருந்து தங்கப் பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.

கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பிரகாரம், அத்தனகல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் யசேந்திர நாலக தலைமையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here