நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு கைதிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமைந்த 23 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
