580 லட்சம் ரூபாவுக்கு 35 நாய்கள் இறக்குமதி

0
183

இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய் பிரிவுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 35 நாய்கள் நேற்று (05) அதிகாலை நெதர்லாந்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

நெதர்லாந்தில் உள்ள K10 Workingdogs என்ற தனியார் விலங்கு பண்ணையில் இருந்து இந்த நாய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 58 மில்லியன் ரூபா அல்லது 580 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாய்களில், 13 பெல்ஜிய மலினோயிஸ் நாய்கள், 12 ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் மற்றும் 10 ஆங்கில ஸ்பானியல் நாய்கள் உட்பட 35 நாய்கள் இருப்பதாக காவல் துறை மோப்ப நாய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் 8 முதல் 12 மாதங்களுக்கு இடைப்பட்ட 21 நாய்கள் பெண் நாய்கள் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here