செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் இருந்து வந்த அழைப்பு

Date:

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு மலேசியா வருமாறு டட்டுக் ஸ்ரீ சரவணன் முருகனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூவின மக்கள் வாழும் நாடான இலங்கையில், மூவின மக்களுக்கும் பாரபட்சம் இன்றி சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் தலைவர் என்ற ரீதியில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இந்த விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மலேசியா பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு. அங்குள்ள இந்தியா வம்சாவளி தமிழர்களுடன், மூவின மக்களும் ஒன்றாக வாழ தான் முன்னெடுத்த வழிமுறைகள் குறித்தும், தனது தலைமைத்துவ பண்புகள் மற்றும் தொடர் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாட கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, இன்று செந்தில் தொண்டமான் மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...