தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்கள் முறையான ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்டதாக வந்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது