முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்தும் நாட்டை விட்டும் தப்பிச் செல்ல வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்ற பாரிய மக்கள் போராட்டத்திற்கு இன்றுடன் (09) ஒரு வருடம் பூர்த்தியாகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக சகிப்புத்தன்மையின் எல்லையை எட்டிய இலட்சக்கணக்கான மக்கள் 2022 ஜூலை 09 அன்று நாட்டின் பல பாகங்களில் இருந்து கொழும்புக்கு வந்து கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி போராட்டங்களை நடத்தினர்.

ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கையகப்படுத்தியதுடன், ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ச கடைசி நேரத்தில் படகில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.
அந்த மக்கள் போராட்டத்தை 1953 ஹர்த்தாலுக்குப் பிறகு இலங்கையில் நடந்த மிகப்பெரிய அரசியல் போராட்டம் என்று சொல்லலாம்.
