தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை தேடும் ஜனாதிபதி செயலகம்

0
77

இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குச் சொந்தமான தொல்பொருள் அல்லது கலைப் பெறுமதி கொண்ட பொருட்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதனை மீளப் பெற்றுத் தருமாறும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பொருட்களை ஜூலை 31 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை 2022 ஜூலை 9 முதல் ஜூலை 14 வரை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்த போது, இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகளுடன் தொடர்புடைய பல மதிப்புமிக்க தொல்பொருட்கள் மற்றும் முக்கிய பொருட்கள் காணாமல் போயின.

அரச சொத்துக்களை சட்டவிரோதமாக வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், குறிப்பிட்ட காலத்திற்கு அப்பால் இந்த உத்தியோகபூர்வ அடையாளங்களை வைத்திருப்பது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த காணாமல் போன பொருட்கள் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால், 0112354354 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு ஜனாதிபதி செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்ற ஜனாதிபதியின் செயலாளர், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சின்னங்களை கண்டறிவதில் பொதுமக்களின் உதவி மிகவும் முக்கியமானது எனவும் அவர்களின் உதவி மிகவும் பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here