ஜனாதிபதி தேர்தலுக்கு தடை கோரி மீண்டும் மனு

Date:

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கும் வரை அரசியலமைப்பு மீறல் என தீர்ப்பளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவடுன இந்த மனுவை சமர்ப்பித்துள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக, ஒரு வருடத்திற்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 70வது சரத்து திருத்தப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தம் பொதுவாக்கெடுப்புக்கு அனுப்பப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்த போதிலும், இதுவரை அது பொது வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்த சட்டத்திருத்தம் பொதுவாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டு கையொப்பமிடாததால் இந்த சட்டத் திருத்தத்தை சட்டமாக கருத முடியாது என மனுதாரர் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் 19வது திருத்தச் சட்டத்தை சட்டமாக ஏற்றுக்கொள்வது தவறு என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து சர்வதேச...

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...