ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியின் மாவட்டத் தலைவர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்ததையும் ஜனாதிபதி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை நிராகரித்ததையும் நாம் முன்னர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தோம்.
மொட்டு கட்சியை சேர்ந்த சிரேஷ்ட ஒருவர் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் ஊடாக இது தொடர்பில் மீண்டும் செய்தி அனுப்பியுள்ளார்.
“எங்களுக்கு மிக விரைவில் கேபினட் அமைச்சர் பதவிகள் வேண்டும், இல்லையெனில் வரும் தேர்தலில் எங்களால் பணியாற்ற முடியாது” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதைக் கேட்ட ஜனாதிபதி கடும் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.
“அந்த ஊழல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு மக்களிடம் இருந்து அடி வாங்க வேண்டி வரும். அதனால்தான் அந்த வேலையைச் செய்ய முடியாது. அதுமட்டுமின்றி, அவர்கள் உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை நான் ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன். மொட்டு ஒரு கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மையானவர்கள் எனக்கு ஆதரவளிக்க வருவார்கள்” என ஜனாதிபதி பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.