அரசியலமைப்பின் ஒரு பந்தியில் திருத்தம் செய்ய அங்கீகாரம்!

Date:

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட’ எனும் சொல்லுக்கு மாற்றாக ‘ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட’ எனும் சொல்லை பதிலீடு செய்து அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியைத் திருத்தம் செய்வதற்காக 2024.07.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில்
வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கும்
ஜனாதிபதியும், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...