தற்போது வரிசையில் நிற்கும் வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னரே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை CPC ஆரம்பிக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு மற்றும் நம்பர் பிளேட் அமைப்புகளின் கடைசி இலக்கம் கட்டாயமாக்கப்படுவதன் மூலம் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
காஞ்சன விஜேசேகர எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து புதிய முறைமைக்கு அமைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடினார்.
கலந்துரையாடலில், ஜூலை 19 ஆம் தேதி பெற்றோல் சரக்குகளை இறக்கிய பின்னர், எரிபொருள் விநியோகத்தை தொடங்குவதற்கான தற்காலிக தேதியாக ஜூலை 21 ஆம் தேதியை அமைச்சர் வழங்கியுள்ளார். எவ்வாறாயினும், நடைமுறைக்கு வரும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ட்வீட் செய்தார்