விடுதியில் இளைஞரின் சடலம் 

Date:

நுவரெலியா கூட்டுறவுத் தங்குமிடம் விடுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

பனாபிட்டிய, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் தங்குமிடத்துக்கு வந்திருந்த மேற்படி இளைஞர், அந்த இடத்தை விட்டு இன்று காலை வெளியேறுவதாக விடுதி நிர்வாகத்துக்குத் தெரிவித்திருந்தார்.

எனினும், இன்று காலை வரை அவர் வெளியே வராத காரணத்தால் சந்தேகம் ஏற்பட்டு அறையின் ஜன்னல் பகுதியில் இருந்து ஆய்வு செய்தபோது, சம்பந்தப்பட்டவர் தரையில் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்த ஊழியர் ஒருவர் இது குறித்து நுவரெலியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், மேற்படி நபர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தனர்.

இதனைத் தொடர்ந்து 1990 நோயாளர் அம்புலன்ஸ் சேவைக்குப் பொலிஸார் அழைப்பு விடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த அம்புலன்ஸ் சேவையினர், கீழே வீழ்ந்து கிடந்த நபரைப் பரிசோதனை செய்து அவர் உயிரிழந்தமையை உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...