லயன்ஸ் கிளப் கொழும்பு ஓஷன் சிட்டி 306 B2 இன் புதிய தலைவராக தொழிலதிபர் சுதாகரன் தெரிவு

0
184

லயன்ஸ் கிளப் கொழும்பு ஓஷன் சிட்டி 306 B2 இன் 19வது உள்ளீர்ப்பு விழா கொழும்பில் உள்ள ஜப்பான் கலாசார நிலையத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்த விழாவின்போது லயன்ஸ் கிளப் கொழும்பு ஓஷன் சிட்டி 306 B2 இன் புதிய தலைவராக தொழிலதிபரும் சினிமா கலைஞரும் சமூக சேவையாளருமான லயன் பாலசுப்பிரமணியம் சுதாகரன் தெரிவு செய்யப்பட்டார்.

விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட லயன் மனேஷ் பஸ்குவல் லயன் பாலசுப்பிரமணியம் சுதாகரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நுவரெலியா மாவட்டம் ராகலை பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட லயன் பாலசுப்பிரமணியம் சுதாகரன் வியாபாரத் துறையில் தன்னை படிப்படியாக வளர்த்துக் கொண்டதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சினிமா துறையில் தன்னை ஈடுபடுத்தி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லயன்ஸ் கிளப் உறுப்பினராக பல சமூக சேவைகளிலும் லயன் பாலசுப்பிரமணியம் சுதாகரன் பங்களிப்பு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here