பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குவீடு, காணி உரிமைகள் வழங்குவேன்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வாக்குறுதி

Date:

“எமது நாட்டில் 200 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட சமூகம் எமது நாட்டினது மக்கள் தொகுதியாகும். தோட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளில் ரணசிங்க பிரேமதாஸ பெரும் பங்காற்றினார். குடியுரிமை குறித்து பேசும்போது, காணி உரிமை இல்லாத குடியுரிமை பயனற்றது. எமது நாட்டின் பிரஜைகள் தமது சொந்தக் காணியிலும், வீட்டிலும் வாழும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. இது அவர்களது அடிப்படை உரிமை.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 351 ஆவது கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கண்டி, கஹவடகோரலை, விவேகானந்தா கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் மட்டுமே உள்ளடங்கியுள்ளன. எமது நாட்டிலும் தென்னாப்பிரிக்காவின் அரசமைப்பைப் போல் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதாரம், சமூகம், கலாசாரம், வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் சொந்த வீட்டுக்கான உரிமைகளையும் உள்ளடக்க வேண்டும்.

எமது நாட்டின் பெருந்தோட்டத்துறையில் அப்பாவியாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் விளையாட்டுகளுக்கு இடம்கொடுக்காமல், விவசாயம் செய்யப்படாத தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை இவர்களுக்கு வழங்கி, சொந்தமாக வீடு கட்டி, அந்த காணியில் சிறிய தேயிலை தோட்டம் அமைத்து, மக்கள் சமூகத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையையும், வரத்தினையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் பெற்றுத்தருவேன்.

மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான விடயங்கள் குறித்தான அம்சங்கள் அடிப்படை உரிமைகள் அத்தியாத்தில் சேர்க்கப்படும்போது, ஒவ்வொரு ஆட்சியாளரும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அழுத்தத்தைச் சந்திப்பார். இது ஆட்சியாளர்களது பொறுப்பாகிவிடும்.

அடிப்படை உரிமைகள் குறித்து பேசினாலும், கொரோனா வைரஸின் போது முஸ்லிம் மக்களினது மத மற்றும் கலாச்சார உரிமைகள் மீறப்பட்டன. தகனமா? அடக்கமா? என்ற விவகாரத்தில் தவறான அறிவியல் அறிக்கைகளைக் காட்டி முஸ்லிம் சமூகத்தினர் பாராபட்சமாக தாக்கப்பட்டனர். மத, கலாசார உரிமைகளை அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் ஆட்சியாளர்களால் அவ்வாறான நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...