“விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை?” இந்த பழமொழிக்கு விளக்க தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகையால் இதற்கான விளக்கத்தை தவிர்த்து, விடயத்திற்கு வருகிறேன்.
போர் முடிந்து கடந்த பதினைந்து வருடங்களிற்கு மேலாக, ஈழத்தமிழர்களாகிய நாம் – சிறிலங்காவின் போர்குற்றம், இனபடுகொலை போன்று, அரசியல் தீர்வில் எந்த முன்னேற்றமும் கணாது வாழ்கிறோம். மாறாக நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், சகல கட்டமைப்புகளும் மூன்றாக நான்காக பிரிந்து ஒற்றுமையின்றி செயற்படுகின்றன.
இதற்குள் எமது தேசிய தலைவர் உயிருடன் இருப்பதை மறுதலித்து இல்லையென பரப்புரை செய்வதில் ஒரு பிரிவினர் மிகவும் கடுமையாக 24/7 உழைக்கிறார்கள். இன்னுமொரு பிரிவினர் தலைவரின் இருப்பு இப்போதைய நிலையில் முக்கிய அல்ல, அவர் விட்டு சென்ற விடயத்தை தொடருங்கள் என்கிறார்கள்.
(1-15) இவ் வியடத்திற்குள் செல்ல முன், ஓர் முக்கிய விடயத்தை சகலருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சில வருடங்களிற்கு முன் சுவிஸ்லாந்தில், சூரிஜ் மாநாகரில், போரில் இறந்ததாக கூறப்படும் சில தளபதிகளிற்கு விளக்கு ஏற்றப்பட்டது. அங்கு உயிருடன் இருக்கும் சில தளபதிகளிற்கு விளக்கேற்றப்பட்ட காரணத்தினால், அன்று இரவே, இவ் நிகழ்ச்சியை எதிர்த்து “நீங்கள் விளக்கு ஏற்றியவர்களில் சிலர் உயிருடன் இருப்பதை என்னால் நிரூபிக்க முடியுமென அன்று ஓர் WhatsApp அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனை அவ்வேளையில், ஐபிசி வானெலி தொலைகாட்சி, எனது அனுமதியுடன், அடுத்த நாள் தலைமை செய்தியாக்கியது. ஆனால் அன்று விளக்கேற்றியவர்கள் யாரும் இன்று வரை எனது அறிக்கையை மறுதலித்தது கிடையாது. யாவரும் இன்றுவரை அமைதியாகி விட்டனர்.
இங்கு முக்கிய கேள்வி என்னவெனில், அன்று அவ் நிகழ்ச்சியை செய்தவர்களும், ஆகஸ்ட் 2ம் திகதி நிழ்ச்சியை செய்யவுள்ளவர்களும் ஒரே நபர்கள்.
ஆனால் அன்று தேசிய தலைவருக்கு விளக்கேற்ற தவறியவர்கள், ஏன் தற்பொழுது ஏற்ற முன் வந்துள்ளார்கள் என்ற வினாவிற்கு விடை காண முடியுமா?
(2-15) அடுத்து 2023ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 4ம் திகதி, கொழும்பில் வெளியாகும் ஓர் பிராபலியமான ஆங்கில பத்திரிகையில் (The Morning) தலைவர் உயிருடன் இருப்பது பற்றி – மகிந்த ராஜபக்சா, கோத்தபாயா, சரத் பொன்சேக்கா, கமால் குணரத்தின ஆகியோருக்கு முடியுமானால் எனது சவாலை ஏற்குமாறு எழுதியிருந்தேன். ஆனால் இன்று வரை அவர்கள் யாரும் முன்வராது வாயை மூடிவிட்டார்கள். இக்கட்டுரை சில தமிழ், சிங்கள இணையதளங்களில் வெளியாகியிருந்தது.
(3-15) இப்படியாக பல விடயங்கள் தொடர்ந்தனா. இதில் வெடிக்கை என்னவெனில், சில வருடங்களிற்கு முன் சுவிஸ்லாந்தில், உயிருடன் இருக்கும் சில தளபதிகள் விளக்கேற்றப்பட்டது பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டதற்கு முன்னுருமை கொடுத்த ஐபிசி வானெலி தொலைகாட்சி, திடீரென சில முன்னாள் போராளிகளை, தலைவருடன் சேவையாற்றியவர்களென, சிறிலங்கா புலனாய்விற்கு முன்பு கிடைக்காத தகவல்களை, இப் போராளிகள் மூலம் பெற்று, தமது ஊடகங்களில் வெளியிட்டு, லட்சக்கணக்கான பணத்தை சம்பாதித்தார்கள் என்பது வேறு கதை.
ஐபிசி ஊடகங்களில் அன்று செவ்வி கொடுத்த எந்த எவரும், தேசிய தலைவருடன் 2007ம் ஆண்டின் பின்னர் சேவையாற்றியவர்கள் இல்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.
(4-15) அன்று தலைவரது இயக்கத்தில், அவர் போட்ட உணவு, கொடுத்த பயிற்சி உடை துணிவு யாவற்றையு கொண்ட சிலர்இன்று சிலர், தேசிய தலைவர் மீதே பலம் பார்க்கிறார்கள். இதன் விழைவாக, எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி, லட்சக்கணக்காண வெளிநாட்டு பணங்கள் செலவு செய்து, உயிருடன் உள்ள தேசிய தலைவரை, இறந்து விட்டாரென உலகிற்கு நிரூபிக்க போகிறார்களாம்.
(5-15) இது அவர்களது சுதந்திரம், அவர்கள் விரும்பியதை செய்யலாமென நாம் அலட்சியம் பண்ண முடியாது. இவர்கள் ‘ஆட்டை கடித்து மாட்டை கடித்து’ இன்று உயிருடன் உள்ள தேசிய தலைவருக்கே விளக்கு ஏற்ற துணிந்துள்ளார்கள்.
இது எமது தமிழீழ இனத்தின், மக்களின், நிலத்தின், கலாச்சரத்தின் பிரச்சனை. ஆகையால் எந்த தமிழனும் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.
(6-15) ஆகையால், இவ் விளக்கேற்றுதல் – எமது இனத்திற்கு மக்களிற்கு, நிலத்திற்கு, கலாச்சரத்திற்கு என்ன நன்மைகள், தீமைகள் ஏற்படும் என்பதை ஆராய்வது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
(7-15) இதனால் ஈழத்தமிழர்களிற்கு ஏற்பட போகும் நன்மை என்று நாம் ஆராய்ந்தால், அதன் பதில் ‘சைவர்’ அதாவது சிறோ (zero) என்பதே பதிலாகும்.
ஆனால் இவ் நிகழ்ச்சியை முன்னின்று நடத்துபவர்கள், சிங்கள பெத்த அரசுகள், தலைவர்கள், புலனாய்வு பிரிவினர் ஆகியோரினால் – ‘தம்மால் செய்ய முடியதாதை இவர்கள் செய்துள்ளார்கள்’ என்ற பாரீய பாரட்டுதாலை பெற்று கொள்வதுடன், வேறு வேறு சுய லாபங்கள், பணம், பாரிசு பொருட்களையும் பெற்று கொள்ளுவீர்கள்.
(8-15) தேசிய தலைவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி விளக்கேற்றியவுடன், நீங்கள் தேசிய தலைவரின் கொடுத்த உணவை உண்டு, உடையை அணிந்து, பெற்ற பயிற்சியை கொண்டு போராடிய ‘தமிழீழம்’ மலர்ந்து விடுமா?
இல்லையேல் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணமல் போனோர் வந்து விடுவார்களா?
இல்லையேல், தாம் செய்தது ‘போர் குற்றம், இன அழிப்பு’ என்பதை சிங்கள பௌத்த அரசு ஏற்று கொள்ளுமா?
இல்லையேல், சுயநிர்ணய அடிப்படையில் அரசியல் தீர்வு கிடைத்துவிடுமா?
இல்லையேல், தலைவர் இருப்பை பிரதிபடுத்துபவர்கள், ஓரம் கட்டப்பட்டு இல்லாமல் அமைதியாகி விடுவார்களா? யாருக்கு ‘தலைப்பா’ கட்டுகிறீர்கள்?
இவை யாவும் நடைபெறாத கட்டத்தில், இந்த ஆகஸ்ட் 2ம் திகதி நிகழ்ச்சி யாரை திருப்தி படுத்ததுவதற்கு? இதை தொடர்ந்து, நீங்கள் எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறீர்கள்?
(9-15) ஆகஸ்ட் 2ம் திகதி நிகழ்வால், திருப்தி படவுள்ளவார்கள் – சிங்கள பௌத்த அரசுகள், இனவாத சிங்கள தலைவர்கள், சிறிலங்காவின் புலனாய்வின் பிரிவினர் உட்பட சிறிலங்காவின் முப்படையினரே. இவர்களை திருப்திபடுத்துவதற்கு, இவ்வளவு பணத்தை செலவழித்து, எமது இனத்திற்குள் பிரிவுகளிற்கு மேல் பிரிவுகளை உண்டு பண்ணியுள்ளீர்கள்.
(10-15) மீண்டும் மீண்டும் கேட்கிறேன், சில மாதங்களிற்கு முன் – சிலர் ஐரோப்பாவிலிருந்து டென்மார்க் சென்று விளக்கேற்றி என்னத்தை சாதித்தீர்கள்? அங்கு விளக்கேற்ற சென்றவரே, மிக அண்மையில் தேசிய தலைவருக்கும் அவரது சகோதரருக்கும் இருந்த உறவு பற்றி மிக அருமையாக கூறியிருந்தார். ஆனால் அப்படியான சகோதரர் தேசிய தலைவருக்கு ஒரு நிகழ்வை செய்வதை இவர் எப்படி விரும்பியிருக்க முடியும்? இங்கு தான் யாவருடைய பித்தலாட்டங்களும் தெட்ட தெளிவாகிறது.
(11-15) ஆகஸ்ட் 2ம் திகதி நீங்கள் தேசிய தலைவருக்கு விளக்கேற்றுவதால் அவருக்கு ஒரு குறையும் ஏற்பட போவதில்லை. ஆனால் என்றோ ஒரு நாள், தேசிய தலைவரின் இருப்பு நிரூபிக்கப்படும் வேளையில், நீங்கள் அத்தனை பேரும் மக்களால் துரத்தப்படுவீர்கள்.
(12-15) போர் முடிந்து பதினைந்து வருடங்களில், இவ் நிகழ்வை செய்யும், பங்கு கொள்ளும் யாவரும் இன்று வரை விளக்கு கொழுத்துவதை தவிர, ஈழத்தமிழினத்தின் அரசியல் ராஜதந்திர போராட்டத்திற்கு என்ன செய்துள்ளீர்கள் என்பதை உங்கள் நெஞ்சில் கையை வைத்து ஒழிவு மறைவின்றி கூறுங்கள்.
(13-15) இப்படியான உண்மைகள் யாதார்தங்களை எழுதியதற்காக, என் மீது வசை படப்போவதால், நீங்கள் எதையும் சாதிக்க மாட்டீர்கள். இதனால் எந்த தீர்வும் மக்களிற்கு கிடைக்க போவதில்லை.
(14-15) என்னை பொறுத்த வரையில், நான் சாவிற்கு பயந்தவன் அல்ல……”ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, தாயகம் காப்பது கடமையடா”! எப்பொழுது சாவதற்கு தயாரகவுள்ளேன்….
(15-15) இறுதியாக, தேசிய தலைவருக்கு விளக்கேற்றுவதற்கு முன், நீங்கள் யாவரும் உங்களிற்கு கொழுத்துங்கள். ஏனெனில், “நீங்கள் யாவரும் இருந்தலென்ன, இறந்தலென்ன”, எமது தமிழினத்திற்கு உங்களால் எந்த நன்மையும் கிடைக் போவதில்லை. தொடரும்
கிருபா
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
23/07/2025