ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் மொத்தம் 749 பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன. அவற்றில் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வாகனங்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
12 மோட்டார் சைக்கிள்கள், 17 கார்கள், 2 இரட்டை கெப் வண்டிகள், 6 ஒற்றை கெப் வண்டிகள் மற்றும் 3 வகையான வாகனங்கள் காணாமல் போயுள்ளன.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களில் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி செயலகம் அவர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது அங்கு சேதம் ஏற்படுத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 150 பேருக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளிகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.