கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத டைனமைட் மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்த கிழக்கு ஆளுநர், கிழக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய திருகோணமலை ஆளுநர் செயலகத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் திகதி மீனவர்களுடனும் கடற்படையினருடனும் பேச்சுவார்த்தை நடத்த திருகோணமலைக்கு விஜயம் செய்ய இணங்கினார். இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாண கடற் தொழில் அபிவிருத்தி குறித்தும் அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடப்படும் என ஆளுநர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.