யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
யஹலதென்ன, சுனிலகமவில் உள்ள அவர்களது வீட்டில் பொலிஸாரால் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் 52 வயதான பிரதேச சபை உறுப்பினர், அவரது 44 வயது மனைவி மற்றும் 17 வயது மகள் ஆவர்.
பிரதேச சபை உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அவரது மனைவி மற்றும் மகளின் உடல்கள் வீட்டின் அறைகளில் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் இறப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.