இளைஞர்களின் தாயகமான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்ததான இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தால் மேற்கொள்ளப்படும் இளைஞர் கழகங்கள் மற்றும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களை நிறுவுதல், இதற்கு முன்பு நடந்திராத வகையில் அரசியல் அழுத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்து இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த பலர் எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க வருகை தந்தனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்து முந்தைய அரசாங்கங்களின் போது அரசியல்மயமாக்கப்படுவதற்கு எதிராக பேசிய தற்போதைய தலைவர் சுபுன் விஜேரத்னவின் கீழே இந்த அரசியல்மயமாக்கல் நடைபெறுகிறது.
இங்கு திட்டமிட்ட அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியினது இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நெருங்கியவர்கள் இந்த இளைஞர் கழகங்களின் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு நாட்களில் இது குறித்து பாராளுமன்றத்தின் அவதானத்துக்கு கொண்டு வருவேன் என இதன்போது சஜித் அவர்களிடம் தெரிவித்தார்.