தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை விடுதலை செய்ய கல்கிசை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நேரடி மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் இல்லாததால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.