கொஸ்கொட, துவாமோதர பகுதியில் இன்று (ஜூலை 31) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 23 வயதுடைய இளைஞர் ஆவார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.