ஜனாதிபதித் தேர்தலில் 50 வீத வாக்கை எவராலும் பெற முடியாது

Date:

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் கலவரங்கள் வெடிக்ககூடிய ஆபாயம் காணப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (31) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்:-

நாட்டை பொறுத்தவரையில் இப்பொழுதும் எனக்கு ஒரு கரிசனை இருக்கிறது. அதாவது தேர்தலின் பின்னர் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என்ற நிலை இருக்கிறது. சிங்கள வேட்பாளர்களிடையே ஐம்பது சதவிகித வாக்கை பெறக் கூடியவர்கள் என்று எவரும் இல்லை.

உண்மையில் அவர்கள் ஐம்பது சதவிகித வாக்குகளுக்கும் குறைவாகத்தான் பெறுவார்கள்.

ஆனால் இத்தேர்தலில் பலபேர் போட்டியிடுவதாக கூறினாலும் ரணில், சஜித், அனுர என்ற மூன்று போர் தான் முக்கியமானவர்கள்.

இந்த மூவருக்கும் இடையில் என்ன மாதிரியான போட்டி நடக்க போகிறது. இந்த தேர்தலில் மொட்டு கட்சியின் பங்கு என்னவென்று கேட்டீர்களானால் அந்தக் கட்சியில் இருப்பவர்கள் திரும்பவும் ஒரு தேர்தல் வந்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றே கருதுகிறேன்.

அதாவது தெற்கிலே இருக்கிற அவர்களுடைய ஆசனங்கள் எல்லாம் ஜேவிபி கட்சிக்கு போய்விடும் என்பது என்னுடைய கருத்து. அந்தளவிற்கு இந்த நாட்டிற்கு இவர்கள் செய்த துரோகம் மக்கம் மனதிலே இருக்கின்றது.

குறிப்பாக இந்த நாட்டை சூறையாடி இருக்கின்றார்கள், போர் போர் என்று போரின் காரணமாக தங்களை தங்கள் வளர்த்து கொண்டார்கள். இவை எல்லலாம் மக்ளுக்கு இப்போது நன்றாகத் தெரியும்.

ஆகவே எந்த விதத்திலும் தற்போது இருக்கிற நாட்டின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் பண்ணுவதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால தங்களுடைய கட்சியின் தனித்துவத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற முறையில் ஏதோ சில சில பேச்சுக்கள் எல்லாம் பேசி வருகின்றனர்.

அவர்கள் கட்டாயமாக ரணிலுக்கு ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது.இப்போது மொட்டு கட்சியில் உள்ள பலர் ரணிலுக்கு ஆதரவை தெரிவித்துள்ள அதேநேரத்தில் தங்களுடைய தனித்துவத்தை எடுத்து கட்டி வேறொரு வேட்பாளரை போடக்கூடும்.

ஆனால் அவர்களில் 92 பேர் ரணிலுக்கு ஆதரவு என்றால் மற்றையவர்களும் இதே மாதிரியான மனோ நிலையில் இருப்பார்கள் என்று தான் நான் நம்புகின்றேன்.

எனினும் முழுமையாக ரணிலிடம் தாங்கள் சரண்டைந்து விட்டோம் என்று காட்டுவது அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். இன்னும் மக்கள் ஆதரவுடனே இருக்கிறோம் என்று காட்டுவதற்க்கு பலதும் பேசுவார்கள்.

இப்போது அரசாங்கத்தோடு சேர்ந்திருப்பவர்கள் அதிகமாக ரணிலுக்கு ஆதரவை வழங்குவார்கள் என்றே நம்புகிறேன்.

ஏனெனில் ராஜபக்சாக்களோடு இருப்பவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து வெளியே வந்துவிட்டால் இதன் பின்னர் பாராளுமன்றம் போக கூடிய நிலைமை பலருக்கு இல்லை என்பது என்னுடைய கருத்தாகும் என அவர்மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...