பதுளை கவரவில தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
குறித்த மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களை துரிதப்படுத்துமாறும் அதுவரை சேதமடைந்த வீடுகளை திருத்தி அமைக்கும் பொருட்டு ஏற்கனவே அந்த தோட்டத்திற்கு வழங்கப்பட்ட கூரைத் தகடுகளை மக்களிடம் ஒப்படைக்குமாறும் தோட்ட முகாமையாளர் மற்றும் ட்ரஸ்ட் நிறுவன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.





