மாத்தறை கபுகம பகுதியில் இன்று (ஆகஸ்ட் 03) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீடு ஒன்றில் இருந்த ஒருவரை குறிவைத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காயமடைந்த நபர் ஒரு பேருந்து உரிமையாளர் மற்றும் தொழிலதிபர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கந்தரா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.