முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க நாளை (05) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.