Tuesday, November 26, 2024

Latest Posts

சர்வகட்சி அரசாங்கம் என்று சொல்ல முடியாவிட்டால், அனைத்துக் கட்சி செயலனி என்று சொல்லலாம் – ரணில் ஆலோசனை!

உத்தேச அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கம் என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி செயலனி என்று பெயரிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சகாக்களுடன் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:

“அனைத்து கட்சிகள் கொண்ட அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளையும் நாங்கள் அழைத்துள்ளோம். அதற்காக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. இந்த நிலையில் இருந்து விடுபட அனைத்து மக்களும் இணைந்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை பெற்று அனைத்து கட்சி ஆட்சியை உருவாக்கி இந்த நாட்டை கட்டியெழுப்ப பாடுபட வேண்டும். அனைத்துக் கட்சி ஆட்சியில் இணைந்து எங்களுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை அழைக்கிறேன். இவர்கள் அனைவரும் என்னுடன் பணியாற்றியவர்கள், எந்த பிரச்சினையும் இல்லை. நாம் மீண்டும் ஒன்றாக வேலை செய்யலாம் .

1941 ஆம் ஆண்டு, பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்துக்கொண்டு அமைச்சர் பதவியை கைப்பற்றியது முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக ஆக்கப்பட்டது. அதே மரபை நாமும் செயல்படுத்தலாம்

1977 அரசாங்க சதிப்புரட்சியில் 5/6 அதிகாரம் கைப்பற்றப்பட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டு நாடு கட்டியெழுப்பட்டது. ஆனால் இப்போது 5/6 அதிகாரம் இருந்தும் சர்வகட்சி அரசாங்கம் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அதர்க்கு ஒரே வழி அனைத்துக் கட்சி ஆட்சி ஆகும்.

சமீபத்திய வன்முறைச் சோதனைகள் காரணமாக, நாங்கள் ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவசர கால சட்டம்தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இருப்பினும், வரவிருக்கும் திட்டத்தில் சில சட்டங்கள் விதிக்கப்பட வேண்டும். அதர்க்கு அவசர சட்டம் தேவை” என்றார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.