தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

Date:

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை , அவ்வப்போது இலைங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதை கண்டித்து மீனவர்கள் அமைப்பும் பல முறை போராட்டங்களை நடத்தி உள்ளது.

இந்த நிலையில்,  இலங்கை கடற்படை மீண்டும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர்.

பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேர் உள்பட 14 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, படகுடன் சேர்த்து இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை காங்கேசம் துறை கடற்படை தளத்திற்கு மீனவர்களை அழைத்துச்சென்று, அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான...

BYD சிக்களுக்கு மத்தியில் மேலும் ஒரு வழக்கு!

கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட “கனவுகளின் நகரம் - இலங்கை”...

சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது

இணையம் வழியாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 08 வெளிநாட்டு சந்தேக நபர்களையும், 03...