ஆயுதம் காண்பிக்கச் சென்ற மற்றுமோரு சந்தேகநபரின் கதையும் முடிந்தது!

0
303

கொட்டிகாவத்தை முல்லேரிய உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சுமுது ருக்ஷான் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் போது கடுவெல பிரதேசத்தில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் விசேட அதிரடிப்படை வீரர்கள் சந்தேக நபரை ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சந்தேக நபர் பாறை குழியில் விழுந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கடவட உல பியன்வில பகுதியைச் சேர்ந்த துவான் சிரான் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

இந்த சந்தேகநபர் அங்கொட லொக்கா என்ற சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுத் தலைவருக்கு நெருக்கமானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இறந்தவர் மீது 13 கடுமையான குற்ற வழக்குகள் உள்ளதாக பொலீசார் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here