விநாயகருக்கு படைத்த மாம்பழத்தை ஒரு லட்சத்துக்கு ஏலம் எடுத்த லண்டன் தம்பதி!

0
259

வவுனியா, தவசிக்குளத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் பின்னர் நடைபெற்ற பழ ஏலத்தின் போது, மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது.

வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற இந்த பூஜை மற்றும் பழ ஏலத்தில், Tom EJC ரக மாம்பழம் 95,000 ரூபாவிற்கு ஏலம் செய்யப்பட்டதாக ஆலயத்தின் பிரதான பூசகர் தெரிவித்தார்.

லண்டனைச் சேர்ந்த ஒரு தம்பதி இந்த மாம்பழத்தை வாங்கியுள்ளனர்.

இந்த பணம் ஆலயத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என நிர்வாக சபை பிரதானி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here