தாய்லாந்தில் தாக்குதல் கோட்டாபய ராஜபக்ஷ பாதிக்கப்படவில்லை

0
143

தெற்கு தாய்லாந்தில் இன்று 7 பேர் காயமடைந்த பல குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்களால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தின் பாங்கொக்கில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜினாமா செய்யுமாறு கோரி பல அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஜூலை மாதம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற அவர் ஒரு வாரத்திற்கு முன்பு தாய்லாந்திற்கு வந்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here