கோட்டா அடுத்த வாரம் நாடு திரும்புவது உறுதி

Date:

இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கைக்கு வருவது உறுதி என்று வெளிவிவகார அமைச்சரும் கோட்டாபயவின் சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

“கோட்டாபய நாடு திரும்புவதில் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக எந்த ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் இராஜதந்திர மார்க்கமாக நாடு திரும்புவார். அவர் இலங்கையின் குடிமகன், அவர் விரும்பியவாறு பயணம் செய்யலாம்” – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறினார்.

இதேவேளை, கோட்டாபயவின் உறவினரான உதயங்க நேற்றுமுன்தினம் இதே தகவலை வெளியிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில்...

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...

செம்மணி – சர்வதேச விசாரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக...