ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் ரமண்ய மகா நிக்காயேயின் சங்கத் தலைமையகத்திற்கு வந்து வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரரை சந்தித்து மன்னிப்பு கோரினர்.
மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது மகன் அறிக்கை விட்டது தொடர்பாகவே மன்னிப்பு கேட்டனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றமும் அவருக்கு பயணத் தடை விதித்துள்ள போதிலும், ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ இன்னும் வெளிநாட்டில் இருப்பதுடன், மத முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் போதகர் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.