கண்டி நகரை அண்மித்து உள்ள பகுதிகளை போலீசார் சுற்றிவளைப்பு

0
172

போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக கண்டி நகரை அண்மித்து விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான போதைப்பொருள் கடத்தல்காரர்களை அடையாளம் காண்பதற்காக விசேட அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களையும் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்தல் இதன் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இவ்வாறான சுற்றிவளைப்புகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here