நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி நாட்டின் உச்சபட்ச சட்டத்தை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவின்படி இந்த நாட்டின் அடிப்படை உரிமைகளை மீறிய ஒருவராக ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இவ்வாறு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியவர்கள் தமது எதிர்கால அரசாங்கத்தின் கீழ் நீதிமன்றத்தின் முன் பதில் சொல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.