2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, படுதோல்வி அடைவார் என நுவரெலியா மாவட்டக் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கினிகத்தேன கூட்டுறவு விழா மண்டபத்தில் நடைபெற்ற மஸ்கெலியா தொகுதியின் கூட்டுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றும் போதே எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பூரண ஆதரவை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
அவரின் கோரிக்கைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக வர்த்தகரான. தம்மிக்க பெரேரா பெருமளவு பணத்துடன் தேர்தலுக்கு தயாராகி, அந்த பணத்திற்காக பசில் ராஜபக்ஷ பேராசையுடன் உழைத்தார்.
இத்தேர்தலுக்கு நாமல் ராஜபக்ச சரியானவர் அல்ல என தாம் தெரிவித்ததையடுத்து, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்ததையடுத்து, தேர்தலில் தோற்க விரும்பவில்லை என தொழிலதிபர் தம்மிக்க பெரேரா விலகிக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.