19 கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாக தொடர்கிறது.
மத்திய அஞ்சல் அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் அஞ்சல் பைகளை சட்டவிரோதமாக அகற்றியதற்காக அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.