கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (22) இரவு அவர் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, அன்றிரவு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிந்துரைகளின் பேரில் இன்று (23) பிற்பகல் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.