இன்னும் முடிவெடுக்கவில்லை

Date:

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”பலர் என்னிடம் வினவும் ஒரு வினாவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர்.பலமான பல அழுத்தங்களை கொண்டதும் மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் சமதூரத்தில் வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். தீர்க்கமான முடிவின் பின் யாருக்கு ஏன் ஆதரவளிப்போம் என கூறிய போது அதற்கான காரணங்களையும் முன்வைப்போம்.அதன் பின் நீங்களும் பூரண ஆதரவை அளிக்கலாம்.

மக்கள் மத்தியில் தெளிவாக, காரணங்களுடன் அறிவிப்போம். மூன்று வேட்பாளர்களுக்கும் நன்கு தெரியும் எமது மக்களுடைய வாக்குகள் தேவை என்று. இதனால் பேரம் பேசும் சக்தியாக அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்பதை மத்திய செயற்குழுவிற்கு அறிவித்துள்ளேன்.எம்மை பற்றிய நிலவரங்களை சிங்கள மக்களுக்கே அவர்களாகவே புரியக்கூடிய வகையில் அறிவிக்க கூடிய நிலை இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறேன். அதன் பின் கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்” என கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...