கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு

0
536

கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னிட்டு, பொது ஒழுங்கை பேணவும் எந்தவொரு இடையூறுகளையும் தவிர்க்கவும் கொழும்பில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வன்முறை அல்லது சட்டத்தை மீறும் தனிநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

போராட்டத்தின்போது கோட்டை நீதவான்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில், சிறப்புக் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, எந்தவொரு அமைதியின்மையையும் விரைந்து கையாள கலவர எதிர்ப்புப் படைகள் மற்றும் கூடுதல் காவல்துறை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here