பாராளுமன்ற பெண் பொலிஸ் அதிகாரியின் தங்க நகைகள் திருட்டு

Date:

நாடாளுமன்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் வைத்து சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு தங்க மோதிரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.

தனது தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு மோதிரங்களை எங்கோ அகற்றிக் கொண்டிருந்த போது யாரோ ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக அதிகாரியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருடப்பட்ட தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு மோதிரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக, அந்த தனி வீட்டில் உள்ள ஒன்பது பெண் பொலீசார், வரவழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதாவிடம் நாம் வினவிய போது, ​​சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடரும் என தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...