நாட்டில் கோதுமை மா தட்டுப்பாடு, ரொட்டியை காண்பதே இனி கடினம்!

0
161

தற்போது நாட்டில் கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் கோதுமை மாவை சந்தைக்கு வெளியிடுவதை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கோதுமை மாவை கொண்டு வந்த வர்த்தகர்கள் தற்போது ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

“இன்று இலங்கையில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மாவுத் தேவை இரண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது. அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் கோதுமை தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டிய டொலர்கள் கிடைப்பதில்லை. எனவே, இலங்கையின் மொத்த மாவுத் தேவையில் 25% அவர்கள் விநியோகிக்கின்றனர். அப்போது 75% பற்றாக்குறை இருந்தது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க இந்தியா மற்றும் துருக்கியில் இருந்து கோதுமை மாவு இறக்குமதி செய்யப்பட்டது.

தனியார் வர்த்தகர்கள் அத்தகைய இறக்குமதியை கொண்டு வந்து நிலைமையை அமைதிப்படுத்தினர். நேற்று முன்தினம், கோதுமை மாவு ஏற்றுமதிக்கு இந்தியா தற்காலிக தடை விதித்தது.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாவை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் 200-210 ரூபாவாக இருந்த மாவின் விலையை இன்று 350 ரூபாவாக உயர்த்தியுள்ளனர்.

இது மிகவும் அநியாயம். இப்படியே போனால் ஒரு ரொட்டியைக்கூட பார்க்க முடியாது. ஒரு ரொட்டி 250-300 ரூபாய்க்கு வழங்க வேண்டி வரும்.

இவ்வாறு

நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here