காலி முகத்திடல் கிளர்ச்சியாளர்களின் திட்டங்களை முறியடித்து நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களும் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மந்தநிலைக்கு 2 ஆண்டுகளாக நீடித்த கோவிட் தொற்றுநோயே முக்கிய காரணம் என்றும், நாடாளுமன்றத்தின் 225 மக்கள் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைக்க வேண்டியது காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார்.
இந்த நெருக்கடியிலிருந்து மீள ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையிலரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு நல்ல திட்டத்திற்கு அமைய நிர்வகித்து நாட்டை புதிய அபிவிருத்திப் பாதைக்கு வழிநடத்திச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக்க கட்சியின் தங்காலை, சீனிமோதர கிளை அமைப்பு மறுசீரமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.